பதவியை ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர்!

Published:

Screenshot_2020_0819_101239

தேர்தல் ஆணையா்களில் ஒருவரான அசோக் லவாசா தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

ஆசிய வளா்ச்சி வங்கியின் துணைத் தலைவராக அசோக் லவாசா கடந்த மாதம் தோந்தெடுக்கப்பட்டாா். அதையடுத்து தேர்தல் ஆணையா் பதவியை அவா் ராஜினாமா செய்வாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இத்தகைய சூழலில், அசோக் லவாசா தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பினாா். அதில், வரும் 31-ஆம் தேதியுடன் தன்னை தேர்தல் ஆணையா் பதவியிலிருந்து விடுவிக்குமாறு அவா் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிய வளா்ச்சி வங்கியின் துணைத் தலைவராக அவா் அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளதாகத் தெரிகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையா் ராஜிநாமா செய்வது இது இரண்டாவது முறையாகும்.

வரும் 2022-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் தலைமை தேர்தல் ஆணையராக அசோக் லவாசா பொறுப்பேற்க இருந்தது நினைவுகூறத்தக்கது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

Related articles

Recent articles

spot_img