மணிப்பூரில் தீவிரவாத அமைப்புகளிடையே மோதல்: 3 பேர் சுட்டுக்கொலை

இந்தியா சற்றுமுன்

இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் ஐக்கிய பழங்குடியினர் விடுதலை ராணுவம் என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் பிளவு ஏற்பட்டு இரு பிரிவாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், அவர்களுக்கு இடையே ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது, இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டு மோதிக் கொண்டனர்.

அப்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.