கழிவறைக்கு சென்ற 11 வயது சிறுமி! காவலரால் நேர்ந்த கொடுமை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
vankodumai

உத்தரகாண்ட் மாநிலத்தில் காவலர் ஒருவர் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அமைந்துள்ள அரசு குடியிருப்பு ஒன்றில் மாற்றுத்திறனாளி தம்பதியினர் ஒருவர் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சிறுமி வீட்டின் அருகே இருந்த கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறைக்குள் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை.

கழிவறைக்கு சென்ற மகளை காணவில்லை என சிறுமியின் தாய் மகளை தேடி கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு கழிவறை உள்பக்கமாக பூட்டிப்பட்டிருந்த நிலையில் நீண்டநேரமாக கதவை தட்டியுள்ளார்.
அப்போது கழிவறை உள்ளே இருந்து அதே பகுதியை சேர்ந்த சஞ்சிவ் ஜுகாடி என்ற காவலர் தப்பி ஓடியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் உள்ளே சென்று பார்த்தபோது அவரது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மகளை பார்த்து கதறி துடித்த தாய் பின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சிறுமியின் தாயார் கொடுத்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சஞ்சிவ் ஜுகாடியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.