செல்போனில் பெண்ணிடம் நிர்வாண பேச்சு! ரூ.37 ஆயிரத்தை இழந்த இளைஞர்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
cell

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பயந்தரை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகிறார். அண்மையில் அவருக்கு வாட்ஸ்அப் அழைப்பு வந்தபோது எதிர்முனையில் பெண் ஒருவர் இனிக்க இனிக்க பேசினார்.

பின்னர் சில நாட்களாக அப்பெண் இளைஞரிடம் ஆபாசமாக பேச்சு கொடுத்தார். இதற்கு இளைஞர் மயங்கியுள்ளார். ஆடையின்றி வீடியோ காலில் பேசுமாறு அப்பெண் கேட்டுக்கொண்டதால், அந்த இளைஞரும் அப்படியே பேசியுள்ளார். சில மணி நேரத்தில் அப்பெண், இளைஞரை தொடர்பு கொண்டு உங்களது ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர் அப்பெண்ணை எச்சரித்தார்

அப்போது எதிர்முனையில் பேசிய ஆசாமி ஒருவர் தான் சி.பி.ஐ. போலீஸ் அதிகாரி என மிரட்டியதால் பயந்த அந்த இளைஞர் அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.37 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். சில நாள் கழித்து அதே ஆசாமி மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

இதனால் மனஉளைச்சல் அடைந்த இளைஞர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.