நான் தெலுங்கு அல்லுடு: நடிகர் விஷ்ணு விஷால்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
vishnu-vishal
vishnu-vishal

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் ப்ளேயர் ஜ்வாலா காட்டா, இவர்கள் திருமணத்துக்கு தயாராக உள்ளது போல் தெரிகிறது.

முன்னதாக 2020 செப்டம்பரில், விஷ்ணுவும் ஜ்வாலாவும் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதை வெளியுலகத்துக்கு அறிவித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.

vishnu vishal - 2026

ஹைதராபாத்தில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ள ‘காடன்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘ஆரண்யா’வின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடந்தது.

அதில் பேசிய விஷ்ணு விஷால், தான் ஜ்வாலா காட்டாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், விரைவில் தெலுங்கு அல்லுடுவாகப் போவதாகவும் தெரிவித்தார். அதோடு திருமண தேதியை விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.

vishnu - 2026

நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால், “நான் ஜ்வாலாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த படத்தின் போது அவர் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். படத்தின் முழு படப்பிடிப்பின் போதும் அவர் என்னுடன் இருந்தார்” என்று கூறினார்.

முதல் முறையாக ஜ்வாலா காட்டாவுடனான திருமணத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாகப் பேசிய விஷ்ணு விஷால், “நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம், நான் இப்போது ஒரு தெலுங்கு அல்லுடுவாகப் போகிறேன். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

தவிர ‘FIR’ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஷ்ணு, தனது அடுத்தப் படமான ‘மோகன் தாஸ்’ படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.