‌பிறப்பு இறப்பு சான்றிதழ்களை விலைக்கு போட்டு மது அருந்திய ப்யூன்! நிர்வாகம் அதிர்ச்சி!

Published:

filles - 2026

குடிக்க ஆசைப்பட்டு ஒரு ஹாஸ்ப்பிட்டலில் இருந்த பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பழைய பேப்பர் காரரிடம் போட்ட பியூன் பிடிபட்டார் .

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) தீபக் ஒஹ்ரி அலுவலகத்தில் நரேஷ் என்பவர் ஆபீஸ் பியூனாக பணிபுரிகிறார்.

இந்த நரேஷ் மதுவிற்கு அடிமையானவர்.
அதனால் அந்த ஹாஸ்ப்பிட்டலில் இருக்கும் பொருட்களை எல்லாம் அடிக்கடி விற்று குடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் அந்த ஹாஸ்ப்பிட்டலுக்கு ஆயிரக்கணக்கான பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டு வந்து சேர்ந்தது.

அதை பார்த்துக்கொள்ள டாக்டர்கள் நரேஷை காவலுக்கு விட்டு சென்று விட்டார்கள். அப்போது தனியாக இருந்த நரேஷுக்கு தண்ணியடிக்கும் ஆசை வந்தது.

அப்போது அவரின் கையில் காசு இல்லை. அதனால் அங்கிருந்த பிறப்பு இறப்பு சர்ட்டிபிகெட்டையெல்லாம் பழைய பேப்பர் காரனிடம் எடைக்கு போட்டு ஒரு குவாட்டர் வாங்கி குடித்து விட்டு தூங்கிவிட்டார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

மறுநாள் அந்த மருத்துவமனைக்கு வந்த டாக்டர்கள் புதிதாக அச்சடிக்கப்பட்டு வந்த பிறப்பு இறப்பு சர்ட்டிபிகேட்டை காணாமல் தேடியுள்ளார்கள்.

உடனே அது பற்றி நரேஷிடம் விசாரித்தனர். அப்போது அவர் அவற்றையெல்லாம் பழைய பேப்பர்காரரிடம் போட்டு குடித்த விஷயம் தெரியவந்துள்ளது. பின்னர் அந்த பழைய பேப்பர்காரரிடமிருந்து அந்த சர்ட்டிபிக்கேட்டையெல்லாம் பறிமுதல் செய்தார்கள்.

பிறகு அந்த ப்யூன் நரேஷ் மீது போலீசில் புகார் கொடுக்காமல் அவரை எச்சரித்து அனுப்பினார்கள் .

Related articles

Recent articles

spot_img