எதிர்பார்ப்பை அதிகரித்து இணையத்தில் வைரலாகும் கருங்காப்பியம் ஃபர்ஸ்ட் லுக்!

Published:

karunkappiyam - 2026

யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்து, தமிழ்சினிமா ரசிர்களின் பேவரைட் இயக்குனர்கள் பட்டியலில் ஒருவராக திகழ்பவர் டிகே.

இவரின் இயக்கத்தில் காட்டேரி திரைப்படம் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் டிகேயின் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

டிகே இயக்கத்தில் வைபவ், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் காட்டேரி திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சென்ற ஆண்டே வெளியாகி இருக்க வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ‘காட்டேரி’ படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி முடித்துவிட்டார் டிகே. முழுக்க முழுக்க நாயகிகளை மையப்படுத்திய ஹாரர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்திற்கு ‘ கருங்காப்பியம் ‘ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில் காஜல் அகர்வால் , ரெஜினா, ஜனனி , ரைசா, கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இவர்களுடன் ஈரான் நடிகை நொய்ரிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ்.என்.பிரசாத் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு விக்கி ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக விஜய் பணிபுரிந்துள்ளார்.

வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி. இண்டர்நேஷன்ல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கருங்காப்பியம் படத்தை தயாரித்துள்ளன.

இந்நிலையில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related articles

Recent articles

spot_img