ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்பேத்கர் சிலைகள் காணாமல் போனதால் பரபரப்பு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
amaravathi-ambedkar-statues-missing
amaravathi-ambedkar-statues-missing

அம்பேத்கர் நினைவு வனத்தில் நான்கு அம்பேத்கர் சிலைகள் காணாமல் போனது துரதிருஷ்டவசமானது என்று முன்னாள் அமைச்சர் நக்கா ஆனந்த் பாபு விமர்சித்தார்.

அம்பேத்கரின் சிறப்பை உலகிற்கு தெரியச் செய்வதற்காக தெலுங்கு தேசம் கட்சி அரசு ரூபாய் 136 கோடிக்கான ப்ராஜெக்ட் வேலைகளை ஆரம்பித்தது.

ஸ்மிருதிவனம் பிராஜெக்ட் அமைப்பதன் விஷயத்தில் தற்போதைய அரசாங்கம் ஆரம்பத்திலிருந்து சதித் திட்டத்தோடு நடந்துகொள்கிறது. சிலைகள் காணாமல் போனதன் பின்னால் யார் உள்ளரோ அரசாங்கம் உடனே கண்டு பிடிக்க வேண்டும். சிலைத் திருடர்களை பிடிக்காமல் இருப்பதால் அரசாங்கத்தின் மேல் சந்தேகம் விழுகிறது.

அம்பேத்கரை அவமதிப்பது போல் தலித் மக்களின் மீது தாக்குதல்களும் அவமதிப்புகளும் செய்துவருகிறார்கள். ஆதலால் ஆட்சியாளர்களை குற்றம்சாட்ட வேண்டி வருகிறது.

தலைநகரில் உள்ள சிலைகளை மாயம் செய்வது சாமானியர்களால் ஆகக்கூடிய செயல் அல்ல. ஸ்வராஜ் மைதானத்தில் அம்பேத்கர் சிலை நிறுவங்கள்…. நிறுவாமல் போங்கள்! அது பற்றிய கவலை இல்லை.

ஸ்மிருதிவனம் பணிகளை நிறுத்துவதை மட்டும் பொறுக்க மாட்டோம் என்று நக்கா ஆனந்தபாபு எச்சரித்தார்.

ஸ்மிருதி வனத்தில் தலைநகர் விவசாயிகளும் தலித் மகிளா சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.