பொத்தேரி ரயில் நிலையத்தில் கொலையான பெண்: இளைஞர் கைது

இந்தியா சற்றுமுன் சென்னை

பெண் கொலை வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரி ரயில் நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலூரைச் சேர்ந்த பெண் சபீதா (30) கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்தக் கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக ஒருவரைக் கைது செய்தனர்.

அப் பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் வேலூரைச் சேர்ந்த சாதிக்உசேன் (23) என்ற இளைஞரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.