விஜயவாடா கனகதுர்கா வெள்ளி ரத சிங்க பொம்மைகள் திடீர் மாயம்!

இந்தியா சற்றுமுன்
vijayawada-temple-1
vijayawada-temple-1
  • விஜயவாடா கனகதுர்கா வெள்ளி ரதத்தில் சிங்க பொம்மைகளைக் காணோம்.
  • முழுமையாக ஆராய்ந்த பின்னரே புகார் அளிப்பது குறித்து முடிவு என்று செயல் அலுவலர் தெரிவித்தார்

விஜயவாடா இந்திரகீலாத்ரி மலைமேல் கோவில் கொண்டுள்ள தூர்கா மல்லேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின் வெள்ளி ரதத்திற்கு முன்னும் பின்னும் அமைக்கப்பட்ட நான்கு சிங்க பொம்மைகளில் 3 காணாமல் போனது செவ்வாய்க்கிழமை வெளிபட்டதால் கோயிலின் செயல்பாடுகளில் சர்ச்சை எழுந்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக இந்த செய்தியை கோவில் வர்க்கத்தினர் யாரும் தெளிவாகக் கூறவில்லை.

அந்தர்வேதி கோவில் ரதம் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் பின்பு ரதங்களை பரிசீலனை செய்வது மற்றும் அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி ஒன் டௌன் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் அறநிலையத்துறை அதிகாரிகளோடு 13ஆம் தேதி மேற்கு ஏசிபி கூட்டம் ஏற்பாடு செய்தார். அந்த பின்னணியில் வெள்ளி ரதத்தை தேவஸ்தான அதிகாரிகள் பார்வையிட்டார்கள். அப்போதுதான் சிங்க பொம்மைகள் தென்படவில்லை என்ற விஷயத்தையே கண்டுபிடித்தார்கள்.

vijayawada-silver-rath-1
vijayawada-silver-rath-1

சென்ற வருடம் உகாதி அன்று சுவாமி அம்மன் உற்சவ மூர்த்திகளை இந்த வெள்ளி ரதத்தில் வைத்து ஊர்வலம் நடத்தினார்கள். இந்த ஆண்டு கோவிட் காரணமாக தேவஸ்தானம் ஊர்வலங்களை ரத்து செய்தது. அப்போதிலிருந்து அந்த ரதத்திற்கு மூடி போட்டு வைத்துள்ளார்கள்.

அண்மைக்காலம் வரை அதைத் திறக்கவில்லை. இதன் மீது கனக துர்க்கை கோவில் ஈவோ சுரேஷ்பாபு செவ்வாய் அன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில் கடந்த 18 மாதங்களாக வெள்ளி ரதம் மல்லிகார்ஜுன மகாமண்டபத்திலேயே உள்ளது. அதற்கு எத்தனை சிங்கங்கள் உள்ளன? அவற்றை மராமத்துக்கு அளித்துள்ளார்களா? லாக்கரில் வைத்துள்ளார்களா? என்பது பரிசீலனை செய்த பின்பே தெளிவாக தெரியும்.

தேவஸ்தானத்தில் உள்ள வெள்ளி, தங்க பொருட்களுக்கும், வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் உள்ளது. முழு அளவு ஆராய்ந்த பின்பே புகார் அளிப்பதா வேண்டாமா என்ற விஷயத்தைப் பற்றி நாங்கள் முடிவு செய்வோம் என்று தெளிவுபட தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.