30/09/2020 7:46 AM

சிம்லா ஸ்பெஷல்: புதிய கோணத்தில் பழைய கதை!

ஆகவே பிரியங்கா வாத்ராவிற்கு வீடு கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சற்றுமுன்...

சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி! பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை!

சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி….. பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை…..

விரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்! தமிழிசை நம்பிக்கை!

வாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக

சூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்!

இந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.

மனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு! ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு!

வேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்
shimla-priyanka-vadra
shimla-priyanka-vadra

பிரியங்கா வாத்ராவும் ராபர்ட் வாத்ராவும் சிம்லாவில் தற்போது கட்டிக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய புதிய வீடு தொடர்பான கதை இது.

ஹிமாசல் பிரதேஷ் மாநிலத்தில் சிம்லாவிலிருந்து 13 கிமீட்டர் உயரத்திலுள்ள சரப்ரா ஹில்ஸில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா ஒரு விவசாய நிலத்தை 2007 இல் வாங்கினார். அதன் அளவு 3 1/2 பிக்ஹா (bigha).அதாவது 1 பிக்ஹா நிலம் என்பது 22,500 ஸ்கொயர் பீட் (1 Bigha = 22500 sq feet). இப்போது நிலத்தின் பரிமாணம் புரிந்திருக்கும்.

22500*3= 67500 ஸ்கொயர் ஃபீட். ஏறக்குறைய 28 கிரவுண்ட்.

இந்த நிலத்தை 47 லட்சம் கொடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த சதீஷ் குமார் சூட் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார். அப்போதைய ஹிமாசல் பிரதேஷ் அரசாங்கம் இந்த வியாபாரத்திற்காக மாநில சட்டத்தை மாற்றியமைத்தது. ஏனெனில்.. அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு நிரந்தரமாகத் தங்குபவர்களால் மட்டுமே நிலங்களை வாங்க முடியும் என்றிருந்தது.

இந்த இடம் இந்திய ஜனாதிபதியின் கோடைகால ரெஸார்டிற்கு 500 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த காரணத்திற்காக இந்திய ஜனாதிபதியின் செக்ரெட்டரியிடமிருந்து அனுமதி பெற வேண்டிய கட்டாயத்திற்கு இதன் சொந்தக்காரர் ராபர்ட் வாத்ரா உள்ளானார்.

அடுத்ததாக இந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பணி 2008 இல் துவங்கியது. ஏற்கனவே அந்த இடத்தில் இருந்த இரண்டு மாடிக் கட்டிடம் இடித்துத் தள்ளப்பட்டது. அதன் பிறகு, 2010 வாக்கில்.. புதியகட்டுமானம் செய்த பகுதிகளும் இடித்துத் தள்ளப்பட்டது. காரணம் பிரயங்கா வாத்ராவிற்கு அந்த கட்டுமானத்தில் சந்தோஷமில்லையாம். மிகவும் சுமாரான தரத்தில் கட்டியிருந்தார்களாம். ஆகவே மீண்டும் புதிய ஆர்கிடெக்டை வரவழைத்து, புது டிஸைனில் மீண்டும் முதலிலிருந்து கட்டுமானம் துவங்கியது. இதன் நடுவே 2011 முதல் 2013 வரையுள்ள காலகட்டத்தில் இதன் அருகே அடுத்தடுத்து இருந்த மேலும் இரண்டு மனைகள் வேறு வேறு நபர்களிடமிருந்து வாத்ராவால் விலைக்கு வாங்கப்பட்டது.

பிரியங்கா வாத்ராவின் சிம்லா மனைக்கு அடுத்து உள்ள பெரிய மனையின் சொந்தக்காரர் பெயர் தேவேந்தர் ஜித். இவர் அந்த மனையில் ஒரு ஹோட்டல் கட்ட வேண்டுமென்று ப்ளான் செய்து அரசாங்கத்திடம் சென்ற போது, உயர் பாதுகாப்பு இடம் என்பதைக் காரணம் காட்டி இவருடைய ப்ளான் நிராகரிக்கப்பட்டது. பின்னர் கோர்ட் மூலமாகவும் அந்த நிராகரிப்பு ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

RTI ஆக்டிவிஸ்ட் தேவ் ஆஷிஷ் பட்டாச்சார்யா இந்த இடங்கள் தொடர்பாக ஒரு RTI மனு ஒன்றை பதிவு செய்தார்.ஆனால் டெபுடி கமிஷ்னரின் அலுவலகத்தில் அந்த RTI மனு நிராகரிக்கப்பட்டது. காரணமாக அவர்கள் கூறியது பிரியங்கா வாத்ரா SPG பாதுகாப்பில் இருப்பதால் அவர்கள் தொடர்பான எந்த செய்திகளுக்கும் பதிலளிக்க முடியாது என்பதாகும்.

அதன் பிறகு பட்டாச்சார்யா, ஸ்டேட் இன்பர்மேஷன் கமிஷனை அணுகினார். ஜூன் மாதம் 2014 (அதாவது UPA ஆட்சி மாறி NDA ஆட்சி வந்த பிறகு, மாநில கமிஷன் அந்த மாநில அரசை பட்டாச்சார்யாவின் RTI க்கு 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்று பரிந்துரைத்தது.

இந்த ஆர்டரை முறியடிப்பதற்காக, இதனை எதிர்த்து பிரியங்கா வாத்ரா ஹிமாசல் பிரதேஷ் ஹை கோர்டில் ஒரு ரிட் பெடிஷன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, அந்த ஹை கோர்ட் ஸ்டேட் இன்பர்மேஷன் கமிஷனின் ஆர்டருக்கு ஸ்டே விதித்தது. அதாவது பட்டாச்சார்யாவின் RTI அப்ளிகேஷனுக்கு பதிலளிக்க தடை விதித்தது. பிறகு 2016 ஆம் ஆண்டு, இது தொடர்பாக பிரியங்கா வாத்ராவிற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது.

பட்டாச்சார்யா தன்னுடைய RTI இல் பிரியங்கா வாத்ரா வாங்கிய நிலம் தொடர்பாக ஒப்புதலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். அவர் பத்திரங்களின் காப்பிகள், அந்த பத்திரங்களின் குறிப்புகள், கோப்புகளின் குறிப்புகள் போன்றவற்றையும், பிரியங்காவிற்குக் கொடுப்பட்ட சட்டத் தளர்வுகள் பற்றியும், பிரியங்காவின் நிலத்தின் தற்போதைய நிலமைகள் பற்றியும் அளவுகள் பற்றியும் கேட்டிருந்தார்.

செக்‌ஷன் 118, Land Reforms and Tenancy Act படி ஒருவர் ஒரே ஒருமுறை மட்டுமே, ஒரேஒரு காரணத்திற்காக ஹிமாசல் பிரதேசத்தில் நிலம் வாங்க முடியும். ஆனால் இந்த சட்டங்களைக் காற்றில் பறக்கவிட்டு, பிரியங்கா மூன்றுமுறை அந்த மாநிலத்தில் வீடு கட்டுவதற்காகவும், தோட்டக் கலை வளர்ப்பதற்காகவும் நிலம் வாங்கியுள்ளார்.

அதுமட்டுமல்ல, பிரியங்கா வாத்ராவிற்கு தோட்டக்கலையில் எந்த ஈடுபாடும் கிடையாது.அதில் எந்த முன்அனுபவமும் கிடையாது. அப்படியிருக்க அவர் எப்படி அந்த நிலத்தை வாங்கலாம் என்பது பட்டாச்சார்யாவின் கேள்வி.

இதற்கெல்லாம் மேலாக ஒரு மனையை வாங்கினால் அந்த மாநில சட்டப்படி அதற்கான கட்டிடம் இரண்டு வருடத்திற்குள் கட்டி முடித்தாக வேண்டும். அப்படிக் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை என்றால் நிலத்தை மாநில அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் அரசும் சரி பிஜேபி அரசும் சரி இந்த சட்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. தொடர்ந்து இதுநாள்வரை பிரியங்கா வாத்ராவிற்கு நீட்டிப்புகள் வழங்கிக் கொண்டே இருந்துள்ளது.

ஹிமாசல் பிரதேஷ் மாநிலத்து பிஜேபி MLA சுரேஷ் பரத்வாஜ் இந்த வீடு தொடர்பாக தன் ஆட்சேபணையைத் தெரிவித்து, பிரியங்காவின் மனை இருக்கும் இடம் உயர் பாதுகாப்பு மண்டலப் பகுதியைச் சார்ந்தது என்றும், அங்குள்ள ஜனாதிபதியின் கோடை வாசஸ்தலத்திற்கு சில சமயங்களில் பிரதமர் வரும்படி நேரிடலாம் என்றும், அதன் அருகே ஹெலிபேட் அமைந்துள்ளதால் அதனை பிரதமர், ஏர் ஃபோர்ஸைச் சேர்ந்த VVIP க்கள் பயன்படுத்துவார்கள் என்றும் அங்கு இதுபோல் ஒழுங்கீனங்கள் நடக்க அனுமதிக்க முடியாது என்றும் குரல் எழுப்பியுள்ளார்.

ஆகவே பிரியங்கா வாத்ராவிற்கு வீடு கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆகவே அடுத்த போராட்டத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.

OpIndia செய்தி…

  • பிரேமா.எஸ்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு இலங்கைத் தமிழரின் இரங்கல்!

இழந்து வாடும் இல்லத்தாருக்கும் பாரதீய சனதாக் கட்சியினருக்கும் ஈழத் தமிழரின் நெஞ்சார்ந்த இரங்கல்.

சமையல் புதிது.. :

சினிமா...

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

எஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்!

 நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு  எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »