December 7, 2025, 4:59 AM
24.5 C
Chennai

ஜெகனுக்காக வளைக்கப் படும் திருப்பதி கோயில் மரபு: நாயுடு எதிர்ப்பு!

tirupati3
tirupati3

திருமலை திருப்பதியில் கோயிலில் செல்லும் முன் நிபந்தனை படிவத்தில் கையெழுத்திடுவது தொடர்பான குழப்பம்… நிபந்தனைகளை மாற்றுவது வழக்கத்திற்கு விரோதமானது… என்று சந்திரபாபு நாயுடு, ரகுராம கிருஷ்ணம்ராஜு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

திருமலை திருப்பதி கோயிலில், வேற்று மதத்தவர் உள்ளே செல்லும் போது அளிக்கப் படும் உறுதிமொழிப் படிவம் குறித்த பிரச்னை ஆந்திரப் பிரதேசத்தில் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் தீவிரமாக விமர்சித்து வருகிறார்கள்.

எப்போதிலிருந்தோ உள்ள இந்த நிபந்தனையை மாற்றுவது உங்கள் இஷ்டமா என்று வினா எழுப்பி உள்ளார்கள்.

naidu-on-tirupati-matter
naidu-on-tirupati-matter

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த பல்லாண்டு காலமாக வரும் மரபான இந்த நிபந்தனையை கடைபிடிக்க வேண்டிய தேவையில்லை என்று டிடிடி சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி அறிவிப்பு குறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு, நர்சாபுரம் எம்பி ரகுராம கிருஷ்ணம்ராஜு ஆத்திரமடைந்து விமர்சித்துள்ளார்கள்.

தர்ம சம்பிரதாயங்களை தலைவர்கள் மாறும் போதெல்லாம் மாற்றக்கூடாது என்று சந்திரபாபு கூறினார். டிக்ளரேஷன் தேவையில்லை என்று ஓய்வி சுப்பாரெட்டி செய்த அறிவிப்பு குறித்து சந்திரபாபு நாயுடு மிகவும் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சோஷல் மீடியாவில் சந்திரபாபு இதுகுறித்து கூறியுள்ளார். இது பரம்பரை வழக்கங்களுக்கு எதிரானது என்றார். அவர் செய்த ட்வீட்டில் நம் கலாச்சாரத்திற்கு மூலம் சனாதன தர்மமே. ஏஷ: தர்ம சனாதனஹ என்றார் வால்மீகி.

tirupati-matter
tirupati-matter

சனாதனம் என்றாலே புராதனமானது நித்தியமானது சத்தியமானது எந்த காலத்திற்கும் மாறாத சாஸ்வதம் என்று சந்திரபாபு தெரிவித்தார். அப்படிப்பட்ட சம்பிரதாயங்கள் ஆட்சியாளர் மாறும் போதெல்லாம் மாறாது என்று சமூக வலைதளத்தில் சந்திரபாபு தெரிவித்துள்ளார். அவ்வாறு மாற்றுவது மக்களின் மனநிலையை பாதிக்கும் விஷயம் என்று சந்திரபாபு விமர்சித்தார். நம்பிக்கை இல்லாத மனிதருக்காக நிபந்தனைகளை மாற்றுவது ஆச்சாரம் அல்ல என்றார். உண்மையில் மதம் என்றாலே நம்பிக்கை என்று சந்திரபாபு டிக்ளரேஷன் என்பதன் உத்தேசத்தை தெளிவுபடுத்தினார்.

யாராக இருந்தாலும் சரி… சுவாமி மீது நம்பிக்கையோடு வருவதற்காக மட்டுமே திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் பிற மதத்தவர்களுக்கு டிக்ளரேஷன் கொடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்துள்ளார்கள். ஒரு நம்பிக்கை இல்லாதவரின் வருகைக்காக பரம்பரையாக அனுசரித்து வரும் சம்பிரதாயத்தை மாற்றுவது அனாச்சாரம் என்று சந்திரபாபு ஆத்திரம் அடைந்தார்.

இது சமுதாயத்திற்கு கேடு என்றும் ஆன்மீகத்திற்கு துரோகம் என்றும் கூட கூறிய சந்திரபாபு, திருமலையில் பிற மதத்தினருக்கு சுவாமி தரிசனத்திற்கு நோ டிக்ளரேஷன் என்று செய்த அறிவிப்பு குறித்து ஆத்திரமடைந்து கூறியுள்ளார்.

முதல்வர் ஜெகன் டிக்ளரேஷன் கொடுக்காமல் இருப்பது சரியானதல்ல என்று எம்பி ரகுராம கிருஷ்ணம்ராஜு தெரிவித்தார். அதே சமயத்தில் ரகுராம கிரிஷ்ணம்ராஜு கூட திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த பல ஆண்டுகளாக இருந்துவரும் டிக்ளரேஷன் நிபந்தனை யை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடைபிடிக்காமல் போவது சரியானது அல்ல என்று விமர்சித்துள்ளார்.

பைத்தியகாரத்தனமான எண்ணங்களை விட்டு விட வேண்டும் என்றும் அவருக்கு அறிவுரை கூறினார். அன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், சோனியா காந்தி போன்ற பிரமுகர்கள் டிக்ளரேஷன் கொடுத்த பின்புதான் சுவாமி தரிசனம் செய்து கொண்டார்கள் என்று நினைவுபடுத்தினார். மத உறுதியை கட்டாயமாக அமல் செய்ய வேண்டும் என்று இன்றைய கவர்னர் கட்டளையிட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டார் ரகுராம கிருஷ்ணம் ராஜு.

முதல்வர் ஜெகன் பிற மதத்தவர்களின் மனநிலை களையும் கௌரவிக்க வேண்டும். கடந்த காலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி டிக்ளரேஷன் கொடுக்காமலேயே சுவாமியை தரிசனம் செய்து கொண்டார் என்று விமர்சித்தார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செக்யூலர் என்று தான் நினைப்பதாக கூறினார். அனைத்து மதங்களின் மீதும் அவருக்கு கௌரவம் நம்பிக்கை இருக்கிறது என்று தான் நம்புவதாக எம்பி ரகுராம கிரிஷ்ணம்ராஜு தெரிவித்தார்.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிற மதத்தவர்களின் மனநிலைகளையும் கவுரவிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். டிக்ளரேஷன் தேவையில்லை என்று டிடிடி சேர்மன் செய்த அறிவிப்பை தீவிரமாக கண்டித்தார் நரசாபுரம் எம்பி ரகு ராமகிருஷ்ணம் ராஜு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories