திருமலையில் வேற்று மதத்தவர் தரிசன விவகாரம்! சூடு பிடித்த அரசியல்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
tirupati1
tirupati1

திருமலைக்கு பிற மதத்தினர் தரிசனத்துக்கு வருவது பற்றி ஒய்வி சுப்பாரெட்டி அறிவிப்பு குறித்து ஆத்திரமடைந்த ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு.

ஸ்ரீவாரி தரிசனத்திற்கு வரும் பிற மதத்தினர் டிக்ளரேஷன் எதுவும் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி செய்த அறிவிப்பு விவாதத்திற்கு வழி வகுத்தது.

அதுகுறித்து ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு தீவிரமாக ஆத்திரமடைந்தார். திருமலை ஸ்ரீவாரி தரிசனத்திற்கு டிக்ளரேஷன் எதுவும் தேவையில்லை என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் செய்த அறிவிப்பு மீது ரகளை கிளம்பியுள்ளது.

ஸ்ரீவாரி மீது பக்தி விசுவாசத்தோடு திருமலைக்கு வரும் பிற மதத்தினர் சுவாமியை தரிசிப்பதற்கு எப்படிப்பட்ட மத உறுதியும் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்று சேர்மன் கூறினார்.

சுப்பாரெட்டியின் அறிவிப்பு மீது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு மிகவும் தீவிரமாக ஆத்திரமடைந்தார்.

tirupathi
tirupathi

ட்விட்டர் மீது அவர் இதுகுறித்து போஸ்ட் செய்துள்ளார். டிக்ளரேஷன் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போதையது அல்ல என்றும் எத்தனையோ ஆண்டுகளாக டிடிடியில் தொடர்ந்து வரும் நிபந்தனையே இது என்றும், தான் மாணவராக இருந்தபோது திருமலையை தரிசிப்பதற்கு வந்தபோது தம்மோடு க்யூவில் வந்த ஒரு வெளிநாட்டினரை டிக்ளரேஷன் கையெழுத்து போட்ட பிறகுதான் தரிசனத்திற்கு அனுமதித்தார்கள் என்றும் அவர் கூறினார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

சோனியா காந்தி தரிசனத்திற்கு வந்த போது கூட அப்போதைய காரிய நிர்வாக அதிகாரி இதுபோன்ற டிக்ளரேஷனுக்காக பிடிவாதம் பிடித்தார் என்பதால் சில தலைவர்களின் கோபத்துக்கு ஆளானார் என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

iyrk-rao-tirupati
iyrk-rao-tirupati

இன்று உள்ளது உள்ளபடி இந்த மரபை எடுத்தெறிய வேண்டிய தேவை என்ன என்று அவர் வினா எழுப்பினார்.

மாநில அரசாங்கத்தின் தரப்பில் முதலமைச்சர் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று எங்கும் இல்லை என்றும் நம்பிக்கை விசுவாசம் இல்லாதபோது அந்த நிகழ்ச்சியை அறநிலை துறை அமைச்சர் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.