கொரோனா கொடூர பரவலுக்கு தப்ளிக் ஜமாஅத் காரணம்: உறுதிப் படுத்திய உள்துறை அமைச்சகம் !

Published:

tabliqi-jamaat-markaz-delhi
tabliqi-jamaat-markaz-delhi

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு தில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் பலரும் பங்கேற்றதே காரணம் என மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, மார்ச் மாதம் தில்லியின் நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லிகி ஜமாஅத் கூட்டம் கொரோனா வைரஸ் தொற்று “பல நபர்களுக்கு” ​​பரவ வழிவகுத்தது என்று கூறியுள்ளார்.
 
கொரோனா வெளிநாடுகளில் வேகமாகப் பரவத் தொடங்கிய நாட்களில் தில்லி நிஜாமுதீனில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்க, 35 நாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் தில்லிக்கு வந்தனர்.

அதில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இவர்களில் பலர் விசா விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசா விதிமுறை மீறலில் ஈடுபட்ட 2,765 பேர் மீது 11 மாநிலங்களில் 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

இன்று மாநிலங்களவையில் தப்லிகி ஜமாஅத் குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது….

தில்லி தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் கொரோனா விதிமுறைகளை மீறி கூடியிருந்த 236 பேரை போலீசார் கைது செய்தனர். 2,361 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

தில்லி அரசு விதித்திருந்த கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகளை மீறி சமூக விலகலைக் கடைபிடிக்காமல், சானிடைசர் இல்லாமல், மாஸ்க் அணியாமல் ஒன்றாகப் பலர் கூடியிருந்தார்கள். தப்லிகி ஜமாஅத்தின் தலைவர் மௌலானா சாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு, தப்லிகி ஜமாஅத் மாநாடும் ஒரு காரணம்… என்று கூறியிருக்கிறார்.

தில்லி மற்றும் பிற மாநிலங்களில் கொரோனா பரவுவதற்கு ஒரு முக்கியக் காரணம் தப்லிகி ஜமாஅத், மக்களைச் சேர்த்ததுதான்” என்று ஒரு கேள்விக்கு பதிலளித்த ரெட்டி கூறியுள்ளார்.

“தில்லி காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டபடி, கோவிட் காரணமாக பல்வேறு அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகள் இருந்தபோதிலும் கோவிட்- 19 தொற்றுநோய், நிஜாமுதீன் மார்காஸுக்குள் ஒரு நீண்ட காலத்திற்கு கூடியிருந்த ஒரு பெரிய கூட்டத்தின் மூலம், தனிநபர் விலகல் கடைபிடிக்காமல், முககவசம் அணியாமல், சானிடிசர்கள் பயன்படுத்தாமல் இருந்தது, பல நபர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு காரணமாக அமைந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தில்லி காவல்துறையினர் 233 தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்களை கைது செய்ததாகவும், மார்ச் 29 முதல் 2,361 பேர் அமைப்பின் தலைமையகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
இருப்பினும், ஜமாஅத் தலைவர் மௌலானா சாத் மீது விசாரணை நடந்து வருகிறது. தப்லிகி சேகரிப்பு தொடர்பான வழக்கு, 304/308/336/188/269/270/271 / 120-பி ஐபிசி, பிரிவு 14-பி வெளிநாட்டினர் சட்டம் 1946, பிரிவு 3 தொற்று நோய்கள் சட்டம் 1897 மற்றும் பிரிவு 51/58 பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ஆகிய பிரிவுகளின் கீழ் தில்லி காவல்துறையால் பதியப் பெற்று நடந்துவருகிறது ”என்று அமைச்சர் மேலும் கூறினார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img