திருமலை திருப்பதியில் ஜகன்மோகன் ரெட்டி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
jagan-mohan-reddy-in-tirupati
jagan-mohan-reddy-in-tirupati

திருமலை திருப்பதியில் வஸ்த்ரம் சமர்ப்பிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று வந்திருந்தார். அவர் கருட சேவையில் கலந்து கொள்வதற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

திருமலையில் மகா துவாரம் வழியாக ஆலயப் பிரவேசம் செய்தார் ஜெகன் மோகன். பஞ்சகச்ச வேஷ்டி கட்டும், நெற்றியில் திருநாமமும் தரித்து ஆந்திர முதல்வர் ஜெகன் ஸ்ரீவாருக்கு பட்டு வஸ்திரங்களை தலைமேல் தாங்கி எடுத்துச் சென்று சமர்ப்பித்தார்.

jagan-vijayamma-roja
jagan-vijayamma-roja

முதல்வரோடு டிடிடி சேர்மன் சுப்பாரெட்டி, கோயில் செயல் அலுவலர் மற்றும் அமைச்சர்கள் உடன் சென்றனர். எம்எல்ஏ ரோஜா உடனிருந்தார். முதலில் பேடி ஆஞ்சநேயர் ஸ்வாமி யை தரிசித்துக் கொண்டார் முதல்வர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.