
அம்புலிமாமா சங்கர் காலமானார்.
இந்தியாவில் மிக அதிகமாக வாசகர்களைப் பெற்ற சிறுவர் மாத இதழ் சந்தமாமா (அம்புலிமாமா)வில் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான படங்களை வரைந்த சங்கர் செவ்வாய் அன்று மதியம் காலமானார். 97 வயது சங்கர் முதிர்ந்த வயது காரணமாக சென்னை போரூரில் தன் சொந்த இல்லத்தில் காலமானார்.
1924 ஜூலை 19 ல் பிறந்த சங்கரின் லைன் ட்ராயிங் அப்போது பலருக்கும் எழுச்சியூட்டுவதாக இருந்தது.
வேதாளக் கதைகள் தொடர்பாக அவர் வரைந்த விக்ரமாதித்தன் வேதாளம் கோட்டுச் சித்திரங்கள் வாசகர்களின் நினைவில் எப்போதும் நின்றிருக்கும்.
(சந்தாமாமா) அம்புலிமாமா பத்திரிக்கையை வடிவமைத்த ஓவியர்களில் இதுவரை உயிரோடு இருந்தது சங்கர் ஒருவரே!
இப்போது இவருடைய மரணத்தால் அந்த சகாப்தம் முடிந்து போனது.