விசாகப்பட்டினம் ருஷிகொண்டா கடற்கரைக்கு அரிய கௌரவம்!

இந்தியா சற்றுமுன் சுற்றுலா லைஃப் ஸ்டைல்
vizag-beach
vizag-beach

விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா பீச்சுக்கு அரிதான பெருமை கிடைத்துள்ளது.

உலக அளவில் உள்ள ப்ளூ ஃப்ளாக் பீச்களின் வரிசையில் விசாகா ருஷிகொண்டா பீச் கூட அண்மையில் இணைந்துள்ளது.

ப்ளூ ஃப்ளாக் சர்டிபிகேஷன் கிடைத்தது குறித்து மாநில சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் முத்தம்செட்டி சீனிவாசராவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த ‘நீலக் கொடி’ சர்டிபிகேஷன் கிடைப்பதற்கு உதவி புரிந்த ஒவ்வொருவருக்கும் நன்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உற்சாகத்தில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் இன்னும் பல கடற்கரைகளுக்கு ப்ளூ ஃப்ளாக் சர்டிபிகேஷன் வருவதற்கு முயற்சி செய்வோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவில் ஏழு கடற்கரைகளுக்கு இதுவரை ப்ளூ ஃப்ளாக் சர்டிபிகேஷன் உள்ளது. தற்போது விசாகா ருஷிகொண்ட பீச் எட்டாவது பீச்சாக நின்றுள்ளது.

உலகிலுள்ள 50 ப்ளூ ஃப்ளாக் பீச்சுகளில் பொல்யூஷன் கண்ட்ரோல் பிராக்டிசில் கூட விசாகப்பட்டினம் கடற்கரை மூன்றாவது இடத்தை சாதித்ததற்கு பாராட்டுகள் என்று அவர் தெரிவித்தார்.

இதன்படி ‘ப்ளூ ஃப்ளாக் பீச்சஸ் இண்டியா மிஷின் லீடர்’ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அழகு, சுத்தம், தூய்மை, ஆனந்தம் இவற்றுக்கான சர்வதேச அடையாளம் இந்த FEE சர்டிஃபிகேட் (Foundation of Environmental Education).

இந்த சான்றிதழ் நான்கு தகுதிகளைக் கொண்டு வழங்கப் படுகிறது. நீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் கல்வி, பாதுகாப்பு இவற்றின் அடிப்படையில் சாதிப்பது. இந்த செய்திகளை ஆந்திரா டூரிசம் முதன்மை செயலர் திரு ரஜத் பார்கவா தெரிவித்தார்.

இந்தியாவில் இந்த சான்றிதழ் சாதித்துள்ள மீதி ஏழு கடற்கரைகள் வருமாறு: சிவ்ராஜ்பூர் – குஜராத், கோக்லா – டையூ, காசர்காடு- கர்நாடகா, படுபிட்ரி – கர்நாடகா, கப்பாட் – கேரளா, கோல்டன் – ஒடிசா, ராதாநகர் – அந்தமான். இந்த Eco லேபிள் சான்றிதழ் அளிப்பது 1985ல் பிரான்சில் தொடங்கப்பட்டது.

விசாகப்பட்டினம் ருஷிகொண்டா கடற்கரையை தினமும் 20,000 பேர் நடைப்பயிற்சி, நீச்சல், பிக்னிக், மீன்பிடித்தல், கயாக்கிங் என்னும் படகுசவாரி, மற்றும் கைவினைப் பொருள் செய்தல் போன்றவற்றுக்காக பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆந்திராவுக்குக் கிடைத்த இந்த அரிதான மதிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் கடற்கரைகளை தூய்மை யாக வைத்துக்கொள்ள இதுபோன்ற விருதுகள் ஊக்குவிக்கும் என்பது உண்மை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.