சுபாஷிதம்: அந்த ஒன்பது ரகசியங்கள்!

Published:

subhashitam
subhashitam

சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

16. ஒன்பது ரகசியங்கள்.

செய்யுள்:

ஆயுர்வித்தம் க்ருஹச்சித்ரம் ரஹஸ்யம் மந்த்ரமௌஷதம்|

தபோ தானாவமானே ச நவ கோப்யானி காரயேத்||

– ஹிதோபதேசம்.

பொருள்:

வயது, வருமானம், வீட்டுக் கலகம், தனிப்பட்ட ரகசியங்கள், மந்திரம், மருந்து, தவம், தானம், அவமானம் – இந்த ஒன்பது விஷயங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.

விளக்கம்:

சில விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருந்தால்தான் மனித கௌரவம் நிலைக்கும். வெளியில் யாரிடமும் கூறக் கூடாத ஒன்பது விஷயங்களைப் பற்றி இந்த சுலோகம் விவரிக்கிறது. நாம் பிறரோடு வெளிப்படையாக விவாதிக்க கூடாதவற்றுள் முதலாவது நம் வயது. நம் வரவு செலவு, வருமானம் போன்ற பொருளாதார விஷயங்களை அனாவசியமாக பிறரிடம் ஒப்புவிப்பது தவறு. பணம் இருப்பது தெரிந்தால் கடன் கேட்பார்கள். கடன் இருப்பது தெரிந்தால் விலகிச் செல்வார்கள். அதே போல் கணவன் மனைவி இடையே ஏற்படும் சிறிய, பெரிய குடும்பக் குழப்பங்களை தேவையில்லாமல் பிறரிடம் கூறினால் அது நான்கு சுவர்களைத் தாண்டி வீதிக்குச் செல்லும். பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. எனவே கவனமாக இருக்கும்படி எச்சரிக்கிறது இந்த ஸ்லோகம்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

அதேபோல் நண்பர்கள் என்று எண்ணி சம்சார ரகசியங்களையோ குடும்ப ரகசியங்களையோ கூறிவிட்டால் பின்னர் அதே நண்பர்கள் பகைவர்களாக மாறும் போது, என்ன ஆகும்? எப்போது நம் ரகசியம் வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்ச நேரிடும். எச்சரிக்கை தேவை என்கிறது ஸ்லோகம்.

அதேபோல் நமக்கு குருமார்கள் உபதேசித்த மந்திரத்தை வெளியிடக்கூடாது. அடுத்தது மருந்து. நமக்கு இருக்கும் நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகள் பற்றி பிறருக்குக் கூறவேண்டிய தேவையில்லை. அதை கேட்பவர்கள் ஆளுக்கொரு அறிவுரை கூறுவர். இவ்விதம் பகிரங்கமாக வெளிப்படுத்தக்கூடாத அம்சங்கள் பற்றி நம் கலாச்சாரத்தில் மிகவும் கவனமாக எடுத்துரைத் துள்ளார்கள். கேட்டு நடப்பது நம் கடமை.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img