அரசு திட்டங்களை தெரிந்து கொள்ளவே அதிகாரிகளை சந்தித்தார்; ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: முதல்வர்

Published:

மதுரை: அரசு திட்டங்களை தெரிந்து கொள்ளவே ஆளுநர் அதிகாரிகளை சந்தித்தார் என்றும் ஆளுநர் ஆய்வு செய்யவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.
மேலும் சசிகலா குடும்பம் செய்த தவறுகளே வருமான வரித்துறை சோதனைக்கு காரணம் என்றும் பழனிசாமி தெரிவித்துள்ளார். 
சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த இடத்தில் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படவில்லை என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தி வருகின்றன. 
இந்நிலையில் சிவகங்கையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த இடத்தில் உள்ளது. 
இந்தியாவிலேயே தமிழகம்அ மைதிப்பூங்கா வாக திகழ்கிறது. 
திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்தது. கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் திமுகஆட்சியில் அதிகம் நடைபெற்றன. 
தமிழகத்தை நிரந்தரமாக அதிமுகவே ஆட்சி செய்யும். தொண்டர்கள் மற்றும் மக்கள் விருப்பத்திற்கேற்ப ஆட்சி நடைபெறும். அதை தடுக்க முடியாது” என்று கூறினார்
ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img