02-06-2023 5:41 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Become a member

    Get the best offers and updates relating to Liberty Case News.

    ― Advertisement ―

    spot_img

    ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: மூங்கில் அரிசி ஹல்வா!

    மூங்கில் அரிசி ஹல்வாதேவையான பொருட்கள் 1/2 கப் மூங்கிலரிசி •1/4கப் நாட்டு சர்க்கரை அல்லதுவெல்லம்1/4* கப் தேங்காய் துருவல்•ஏலக்காய் தூள்5 முந்திரி பருப்பு5 உலர் திராட்சைபசுநெய் செய்முறை முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். •நாட்டுசர்க்கரையாக இருந்தால் அப்படியே...
    Homeஇந்தியாதேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

    தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

    தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை செயலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விளம்பர எண்.0220/21

    பணி: இளநிலை செயலக உதவியாளர்(பொது)
    காலியிடங்கள்: 05

    பணி: இளநிலை செயலக உதவியாளர்(நிதி)
    காலியிடங்கள்: 03

    பணி: இளநிலை செயலக உதவியாளர்(பண்டக மற்றும் கொள்முதல்)
    காலியிடங்கள்: 02

    வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200

    தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். நிதி பிரிவு பணிக்கு மட்டும் கணக்கியல் துறையில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை: தட்டச்சு தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Director, CSIR-National Botanical Research Institute, Lucknow என்ற டி.டியாக எடுக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை: www.nbri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து நகல் சான்றிதழ்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
    The Controller of Administration, CSIR-NBRI RanaPratap Marg, Lucknow-225 001.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2021

    மேலும் விவரங்கள் அறிய https://nbri.res.in/media/Advt.-JSA-02-2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.