
மகாராஷ்டிரா மாநிலத்தில் 21 வயதான இளம்பெண் ஒருவர் நாக்பூரில் இருந்து புனே வரை செல்லும் தனியார் ஆம்னி சொகுசு பேருந்து ஒன்றில் பயணம் செய்து உள்ளார். அப்போது அந்த பெண் பேருந்தின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த நிலையில், அந்த பேருந்தின் கிளீனர் அந்த பெண்ணை பேருந்தின் நடுப்பகுதியில் உள்ள இருக்கையில் அமருமாறு கூறி உள்ளார்.
இதனால் அந்த பெண்ணும் அவர் சொன்ன படி அமர்ந்த நிலையில், அந்த பெண்ணிற்கு அருகே சென்ற கிளீனர் அந்த பெண்ணிடம் கொலை மிரட்டல் விடுத்து அந்த பெண்ணை பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
மீண்டும் ஒரு முறை அதேப்போல் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
இதனால் அதிர்ந்து போன இளம்பெண் புனேவிற்கு வந்ததும் இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் அந்த கிளீனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.