
பிரபல இளம் நடிகை ஒருவர் மது போதையில் தனது காதலனுடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது, அந்த நடிகைக்கு தெரியாமல் ஆபாச வீடியோ எடுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராதிகா. இளம் நடிகையான இவர் ராஜேஷ் என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் டேட்டிங் சென்றுள்ளனர். அப்போது, நடிகை ராதிகாவுக்கு அளவுக்கு அதிகமாக மது விருந்து வைத்துள்ளார் ராஜேஷ். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, விரைவில் அவரை திருணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து, அவருடன் உறவு வைத்துக்கொண்டுள்ளார்.
ஆனால், நடிகை ராதிகாவுக்கு தெரியாமல் அவர் அந்தரங்க காட்சிகளை ரகசிய கேமராவில் பதிவு செய்துள்ளார்.
பிறகு இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்த நிலையில், ராஜேஷ் திருமணத்திற்கு சம்மதம் இல்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை ராதிகா, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை ராதிகாவுக்கு பலருடன் தொடர்பு உள்ளது என அவரது காதலர் ராஜேஷ்-ம், பதிலுக்கு புகார் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.