பிரதர் அனில்குமார் போன் நம்பர் 151, கார் நம்பர் 151 ல் முடியும். அவருடைய பிரார்த்தனைகளால் தான்…
ஆந்திரா முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன்மோகன் ரெட்டியின் சகோதரியின் கணவர் பிரதர் அனில்குமார் குறித்து ஒய்சிபி மூத்த தலைவர் ஜூபூடி பிரபாகர ராவு ஆர்வமூட்டும் செய்திகளைக் கூறியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கிறிஸ்தவர்கள் குறித்து செய்த விமர்சனங்கள் வரலாற்றுத் தவறுகள் என்று ஒய்ஒஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜூபூடி பிரபாகரராவு குறிப்பிட்டார். தங்கள் மனநிலையை வேதனைப் படுத்தும் விதமாக பேசினால் இனி பொறுக்க மாட்டோம் என்று விமர்சித்தார்.
கிழக்கு கோதாவரி மாவட்டம் காகிநாடாவில் சனிக்கிழமை அன்று நடந்த பாஸ்டர்களின் பெல்லோஷிப், கிறிஸ்தவ சங்க தலைவர்களின் கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது ஜூபூடி பிரபாகரராவு ஆர்வமூட்டும் விவரங்களைத் தெரிவித்தார்.
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியின் கணவர் பிரதர் அனில்குமார் பிரார்த்தனை செய்ததால் தான் மாநிலத்தில் அரசாட்சி மாறியது என்று கூறினார். பிரதர் அனிலின் மொபைல் நம்பரின் கடைசி மூன்று எண்கள் 151 என்றும் காரின் கடைசி மூன்று எண்கள் 151 என்றும் ஒய்சிபிக்கு வந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை கூட 151 என்றும் குறிப்பிட்டார். பிரதர் அனில் ஒய்சிபி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 151 வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார் என்று கூறினார்.
விஜயம்மா கையில்
பைபிள் பிடித்து அலைந்தாலும் கூட மக்கள் ஆதரித்தார்கள் என்ற வாஸ்தவ உண்மையை சந்திரபாபு கவனிக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதேபோல் கிறிஸ்தவர்கள் பலவந்தமாக மதமாற்றங்கள் செய்து வருவதாக சந்திரபாபு மத வேறுபாடுகளை தூண்டும் விதமாக பேசுகிறார் என்று ஜூபூடி பிரபாகர் குற்றம்சாட்டினார். கிறிஸ்தவர்களின் மன உணர்வுகளோடு விளையாடலாம் என்று நினைத்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று எச்சரித்தார்.
சந்திரபாபு தோல்வி அடைந்த பின் மானசீகமாக அடிபட்டு விட்டார் என்றும் மதங்களின் இடையே பற்ற வைக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
கோவில் சிலைகளை சேதப்படுத்தியது குறித்து அவர் பேசுகையில் சேதப்படுத்தியவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்று கூறினார்.
சந்திரபாபுவின் விமர்சனங்களால் கிறிஸ்தவர்கள் டிடிபியை விட்டுவிட்டு பிற கட்சிகளுக்குத் தாவும் எண்ணத்தில் இருப்பதாகவும் அவர் விமரிசித்தார்