ஓராண்டாக திருமணத்தை தள்ளிப்போட்ட காதலன்… அதிர்ச்சி அளித்த காதலி.
ஓராண்டு காலமாக தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எத்தனை முறை கேட்டாலும் காதலன் கண்டுகொள்ளாமல் போனதால் காதலி போலீசாரின் உதவியை நாடினாள். அதனால் போலீஸார் ஸ்டேஷனிலேயே அவர்களுக்கு திருமணம் செய்வித்தனர்.
ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த இளைஞன் திருமணம் என்ற பெயரை எடுத்த உடனேயே தப்பித்துக் கொண்டு அலைய ஆரம்பித்தான். காதலி அவனுக்கு அதிர்ச்சி அளித்தாள். காதலன் மீது போலீஸாரிடம் புகார் அளித்ததால் போலீஸ் ஸ்டேஷனிலேயே அவன் கையால் தாலி கட்ட வைத்தார்கள். இந்த சம்பவம் நல்கொண்டா மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குர்ரபோடு மண்டலம் காசீராம் தண்டா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜடாவத் முனேஷ், மேகாவத் சாந்தி இருவரும்ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். ஓராண்டு காலமாக தன்னைத் திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று சாந்தி கேட்டு வந்தாலும் அவன் அதனை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான். இதனால் சாந்தி கிராமத்தில் பெரிய மனிதர்களை கூப்பிட்டு பஞ்சாயத்து கூட செய்தாள். ஆனாலும் அவனில் மாற்றம் வராததால் கிராம பெரியவர்களின் ஆலோசனைப் படி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தாள். போலீசார் கவுன்சிலிங் செய்வதற்கு அவனை அழைத்தார்கள். காதல் பெயரில் மோசம் செய்தால் சிறையில் தள்ளுவதாக எச்சரித்தார்கள். அதன்பின் அவன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான். இருவருமே மேஜர் என்பதால் பெரிய மனிதர்களின் முன்னிலையில் போலீஸ் ஸ்டேஷனிலேயே மாலை மாற்றிக்கொண்டார்கள். அதன் பிறகு குடும்ப அங்கத்தினர்கள், கிராம பெரியவர்கள் முன்னிலையில் உள்ளூர் வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் அவர்கள் இருவருக்கும் சம்பிரதாய முறைப்படி திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கிராம சர்பஞ்ச் தத்ருநாயக் மங்லா, எஸ்ஐ சையது மற்றும் பலர் பங்கு கொண்டார்கள்.