மது போதையில் மகளை தீயிட்டு எரித்த தந்தை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
fire bath 1
fire bath 1

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடி போதையில் தந்தை தனது ஆறு வயது மகளை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்பூர் கிராமத்தை சேர்ந்த ஜோகேந்திரா என்பவர் தினம் குடித்துவிட்டு வந்த குடும்பத்தினருடனும், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுடனும் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவர் வழக்கம்போல் தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென அந்த நபர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது மகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றியதை அடுத்து சிறுமி கதறினார்.

கடுமையாக தீக்காயம் ஏற்பட்ட சிறுமி அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஜோகேந்திராவை கைது செய்தனர்.

சிறுமியின் கழுத்து மற்றும் முகத்தில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஜோகேந்திராவை கைது செய்துள்ள அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.