கல்லூரிக்கு படிக்க சென்ற மகள்.. பேராசிரியர் மனைவியானார்! அதிர்ச்சியில் பெற்றோர்!

சற்றுமுன் தமிழகம்
Periyar-University-1
Periyar-University-1

பெரியார் பல்கலைகழக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ஒருவர் மாணவியை காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைகழத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நபர் உதவி பேராசிரியராக ஆங்கிலத்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இவருக்கு கீழ் படிக்கும் தர்மபுரியைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவியை காதலித்து வந்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக சென்ற இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்தனர்.

இதனால் மூன்று நாட்களுக்கு முன்பு உதவி பேராசிரியருடன் மாணவி சென்று பிடித்துள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர், சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் தன் மகளை, உதவி பேராசிரியர் கடத்திச் சென்றதாக புகார் அளித்தனர். காவல்துறையினர் அவர்களைத் தேடி வந்த நிலையில், அவர்கள் இருவரும் மாலையும் கழுத்துமாக இரும்பாலை காவல் நிலையத்தில் ஜன. 30- ஆம் தேதி ஆஜராகினர்.

மாணவியின் பெற்றோர் வீட்டுக்கு வருமாறு அழைத்தபோது, இனி தன் காதல் கணவருடன் தான் வாழ்வேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதையடுத்து மாணவி மற்றும் அவருடைய பெற்றோரிடம் எழுதி வாங்கிய காவல்துறையினர், உதவி பேராசிரியருடன் மாணவியை அனுப்பி வைத்தனர்.

தன்னிடம் படித்த மாணவியை காதலித்து ஓடிபோய் திருமணம் செய்து கொண்ட விவகாரம் பல்கலைகழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.