பழத்தை தின்ற பசு! கத்தியால் குத்தி சித்ரவதை செய்த பஷீர்!

Published:

cow
cow

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருத் நகரை சேர்ந்தவர் டுவாபிக் பஷீர் முஜாவர், இவர் வண்டியில் பழங்களை விற்பனை செய்து வருகிறார்.

கடந்த செவ்வாயன்று பஷீர் பழம் விற்பனை செய்து கொண்டு இருந்தபோது அந்த வழியாக சென்ற பசு ஒன்று அவரது வண்டியில் இருந்த ஒரு பப்பாளி பழத்தை இழுத்து தின்று விட்டது. இதனால், ஆத்திரமடைந்த பஷீர் அந்த பசுவை பயங்கரமாக தாக்கினார்.

மேலும், தன்னிடம் இருந்த கத்தியால் அதன் அடிவயிற்றிலும், முட்டியிலும் குத்தியுள்ளார். இதனால் பசு படுகாயமடைந்து அலறியது. இது குறித்து பசுவின் உரிமையாளர் முருத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வழக்கு பதிந்த போலீசார் பஷீரை கைது செய்தனர்.

Related articles

Recent articles

spot_img