தாராசுரம் சிற்பக் கலைக் கோயில்!

dharasuram
dharasuram

நான் பிஷப் ஹீபர் கல்லூரியில் 2007 ஆண்டில்
தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றிய போது 45
அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தமிழக அரசு இயக்குநராகச் செயல்படும் வாய்ப்பு வழங்கியது.

இப்பயிற்சியில் கற்றல், கற்பித்தல்,பாடத்திட்ட வடிமைப்பு, படைப்பாற்றல் ஆகிய களங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்குப் பேராசியர்கள், எழுத்தாளர்கள் பெருந்துணையாக இருந்தார்கள். நான் அனைத்தையும் ஒருங்கிணைத்து அவர்களைத் தனித்துவமாக உருவாகப் பேச்சு, எழுத்துத் திறன்களைக் கற்றுக் கொடுத்தேன்.

அவர்கள் என் வாழ்வில் என்றும் முடியாத நல்ல சீடர்கள்.பயிற்சியின் போது “45 சிறகுகளுடன் ஒரு பறவை”என்னும் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.

இப்பயிற்சியின் ஒரு பகுதியாகக் கல்வி, பண்பாட்டுச் சுற்றுலாவுக்குக் கும்பகோணம் அருகிலுள்ள தாரசுரம் அழைத்துச் சென்றேன்.

இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையின் பொறுப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அப்போது கும்பகோணம், இந்து சமய அறநிலையத்தின் உதவி ஆணையராக இருந்த நண்பர் மா. சுப்பிரமணியம் சிறப்பாகச் செய்திருந்தார். அவர் முதலில் வலஞ்சுழி பிள்ளையார் கோயிலுக்கு அழைத்துச் சென்று அனைவருக்கும் சுவையான மதிய உணவு அளித்தார். பின் தாரசுரம் கோயிலுக்கு அழைத்துச் சென்று சிற்பக்கலை வகுப்பு எடுத்தார்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

தாராசுரத்தில் இருப்பது ஐராவதீசுவரர் திருக்கோயில். இங்குள்ள அன்னை பெரிய நாயகி என்றும் தெய்வநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்.இது யுனஸ்கோ நிறுவனத்தின்
உலகப் புகழ்பெற்ற சிற்ப மரபுச்சின்னமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.இந்தப் பிறவியில் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய சிற்பக்கலையின் சங்கமத் திருக்கோயில்.

இது இரண்டாம் இராசராச சோழனால்(கி.பி 1146-1163) கட்டப்பட்டது.இக்கோயிலைப் பற்றி ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியில் குறிப்பிட்டுள்ளார். இக்கோயிலின் பெயர் இராசராசேச்சரம். இவ்வூரின் பழைய பெயர் ராசராசபுரம். கல்வெட்டியில் வருவது ராராபுரம் இது காலப்போக்கில் தாராபுரம் என மருவி இப்போது தாராசுரம் என்று மாறியுள்ளது.

இங்கு சிறிய கருங்கற்களில் நுட்பமான சிற்பக்கலையைப் பலர் வடித்துள்ளனர். இங்கு இலக்கியக் காட்சி வடிவங்களையும் காட்சிப் படுத்தியுள்ளனர். சேக்கிழாரின் பெரியபுராணம் படித்த அரசன் 63 நாயன்மார்களின் வடிவங்களை சிற்பக்கலையாகச் செதுக்கியுள்ளார். இங்கு மட்டும் தான் தேவாரப் பதிகம் சிற்பம் வடிவமாக்கப் பட்டுள்ளது.

அதில் திருநாவுக்கரசர் கயிலை செல்லும் காட்சிகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலை விட்டு வெளியில் வர முடியாமல் தமிழரின் சிற்பக்கலை கண்டு வியந்தேன். என் மனதில் இன்றும் நிற்கும் காட்சி இராமயாணச் சிற்பம். இக்கோயில் அருள் பாலிக்கும் என்பதைக்காட்டிலும் கலையும், காவியமும் பேசும் திருக்கோயிலாகும்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இக்கோயிலை மத்திய, மாநில அரசுகள் ஆவணப்படம் எடுத்துத் தமிழரின் கலைப் பெருமையை இங்கும், எங்கும் பரப்ப வேண்டும். இது ஒரு மானுடத்தின் மகத்தான சாதனையின் சிற்ப வரலாறு.

  • முனைவர் பெ. சுபாசு சந்திரபோஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories