1 வருடம் 7 மாணவர்கள்.. இன்ஸ்டா மூலம் நட்பு.. சிறுமிக்கு கஞ்சா கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
insta
insta

கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 14 வயது மாணவிக்கு கஞ்சா உட்பட பல்வேறு போதைப்பொருட்களை கொடுத்து ஏழு மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் லபகம்சேரி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக ஏழு மாணவர்கள் நட்பு பாராட்டி வந்துள்ளார்கள். அவர்கள் மாணவிக்கு அடிக்கடி போதை வஸ்துக்களை கொடுத்து வந்துள்ளார்கள். மாணவியின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சில நாட்களாக மகளின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தனது மகளின் நிலையைக் கண்ட அவரது தாயார் கேள்வி மேல் கேள்வி கேட்டு மகளிடம் விசாரித்திருக்கிறார். பின்னர் தான் மகள் கஞ்சா உள்ளிட்ட போதைக்கு அடிமையான தகவல் தெரியவந்துள்ளது.

vankodumai 1
vankodumai 1

இதை தொடர்ந்து அந்த மாணவியின் தாய் உள்பட உறவினர்கள் கல்பகசேரி போலீஸ் ஸ்டேசனில் தங்கள் பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை குறித்து புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது. அந்த மாணவியை இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவர்கள் 7 பேரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கொடுத்து போதைக்கு அடிமையாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து மாணவியிடம் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த மாணவியிடம் மேலும் விசாரணை நடத்தியதில் ஏழுபேர் போதைப்பொருட்களை வழங்கி ஒரு வருடக் காலமாக பாலியல் வன்கொடுமை செய்தை அவர்கள் விசாரணையில் உறுதி செய்தனர்.

இதை தொடர்ந்து காவல்துறையினர் ஏழு பேரில் 2 பேரை அதிரடியாக கைது செய்தனர். மலப்புரம் பகுதியை சேர்ந்த இருவரை, எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் கைது செய்தனர். மீதி உள்ள ஐந்துபேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.