வரலட்சுமி நடிக்கும் படப்பிடிப்பில்… சிலிண்டர் வெடித்து தாயும் குழந்தையும் உயிரிழப்பு!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா

vishal varalakshmi - 2026

நடிகை  வரலட்சுமி நடிக்கும் கன்னட சினிமா  படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், படப்பிடிப்பை பார்வையிட வந்த
தாயும் குழந்தையும் உயிரிழந்தனர்.

வரலட்சுமி சரத்குமார் நடித்து வரும் கன்னட  மொழி சினிமா படப்பிடிப்பின் போது சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், படப்பிடிப்பை பார்க்க வந்த பெண்ணும், அவருடைய 8 வயது குழந்தையும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரஞ்சீவி சார்ஜா நடிக்கும் கன்னட சினிமா படப்பிடிப்பு பெங்களூருக்கு அருகேயுள்ள பாகலூரு என்ற இடத்தில் நடைபெற்று வந்தது. ஷெல் கேஸ் கம்பெனி அருகே படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது  விறுவிறுப்பான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.

அதில ஒரு காரை வெடிக்க வைக்கும் காட்சி படமாக்கப் பட்ட போது எதிர்பாராத விதமாக தீ உருவாக்க வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்
வெடித்துச் சிதறியது.

இதில் படப்பிடிப்பை பார்க்க வந்த சுமைரா என்ற பெண்ணும் அவருடைய 8 வயது பெண் குழந்தையும் உயிரிழந்தனர். இது தொடர்பான புகார் போலீசாரிடம் அளிக்கப்பட்டது., இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.