சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிடுகிறார்
நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் அங்கு சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இடம் வாக்கு சேகரித்தார்
இன்று காலை சிதம்பரம் கோயிலுக்கு வந்திருந்தார் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அவர் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்
இதையடுத்து பானைச் சின்னத்துக்காக திருமாவளவன் தீட்சிதர்களிடம் வாக்கு சேகரித்தார்
ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் வகையில் கூட்டணி அமைத்துள்ளது திமுக.
இஸ்லாமிய மத கிறிஸ்தவ மத சார்புள்ள கூட்டணியாக திகழ்கிறது திமுக கூட்டணி.
சனாதனத்தை வேர் அறுப்போம் என்று மாநாடு நடத்திய தொல் திருமாவளவன் சனாதன தர்மத்தை தூக்கிப்பிடிக்கும் தில்லை சிதம்பரம் தீட்சிதர்கள் இடம் வாக்கு கேட்டு வந்தது வியப்பை ஏற்படுத்தியது
அதைவிட மதுரையில் அதிமுக வேட்பாளரை தங்கள் மசூதிக்குள் வாக்கு சேகரிக்க விடாமல் உடன் அழைத்து வந்தவர் இஸ்லாமியராக இருந்தாலும் அதிமுகவில் இருப்பதன் காரணத்தால் உள்ளேயே வரவிடாமல் இஸ்லாமியர்கள் துரத்தியடித்தனர்…
ஆனால் சனாதனத்தை வேர் அறுப்போம் என்று மாநாடு நடத்திய திருமாவளவனை தில்லை தீட்சிதர்கள் எவரும் துரத்தி அடிக்க வில்லை…
கைகூப்பி வழக்கம்போல் அவரை வரவேற்று ஆலயத்துக்குள் அழைத்துச் சென்று மரியாதை செய்து அனுப்பி வைத்தனர்.



