நடிகையுடன் இணைந்து ஆபாசப்படம் எடுத்த நபர்! வங்கியிலிருந்து 5 கோடி பறிமுதல் செய்த போலீஸார்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
Pornography - 2026

நடிகை கெஹானா வசிஸ்த்துடன் சேர்ந்து கொண்டு, ஆபாச படமெடுத்த யஷ் தாக்கூர் என்பவரின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ .5 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நடிகை கெஹானா வசிஸ்த் உடன் சேர்ந்து கொண்டு, வலைத் தொடர்களில் நடிக்க ஆர்வமுள்ள நடிகர்,நடிகைகளுக்கு வலை வீசி அவர்களை வைத்து ஆபாச படம் எடுத்ததாக நடிகை கெஹானா உட்பட 9 பேரை போலீசார் கடந்த மாதம் கைது செய்துள்ளனர்.

அவரோடு சேர்ந்து ஆபாச படமெடுத்து சம்பாதித்தவர் மும்பையை சேர்ந்த யஷ் தாக்கூர் . இவரின் சுமார் 5 கோடி ரூபாய் இரண்டு வங்கிக் கணக்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இப்போது தாகூர் சிங்கப்பூரிலிருந்து செயல்படுவதாகவும், தன்னை ஒரு என்.ஆர்.ஐ என்று கூறிக்கொண்டு இரண்டு வங்கிகளில் கணக்குகளைத் திறந்து, பணத்தை குவித்து வைத்ததாகவும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர் பிளிஸ் மூவிஸ் என்ற ஆப் மூலம் பணம் சம்பாதித்ததாகவும், இவரின் பணம் இந்தூரில் உள்ள ஒரு பிஎன்பி கணக்கிலும், கான்பூரில் ஐசிஐசிஐ கணக்கிலும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்தனர்.

இவரின் பிஎன்பி கணக்கில் ரூ .2.25 கோடியும், மற்றொரூ வங்கியில் ரூ .2.5 கோடியும் இருந்தன.
போலீசார் யஷ் தாக்கூரின் தற்போதைய இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

இப்போது காவல்துறையினர் முதலில் அவரது குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். மேலும் தாகூர் வாரணாசியைச் சேர்ந்தவர் என்று போலீசார் சந்தேகப்படுவதாக ஒரு குற்றப்பிரிவு அதிகாரி கூறினார்.

மேலும் தாகூர் ஆபாச திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் தொடர்புவைத்து கொண்டு, வெவ்வேறு வங்கிகளில் பணம் பரிவர்த்தனை செய்கிறார் . இந்த பரிவர்த்தனைகள் குறித்த போலீஸ் விசாரணையில் இந்த பணம் குவித்த விஷயம் போலீசுக்கு தெரியவந்துள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.