5% உள்நாட்டு விமான கட்டணம் உயர்வு!

இந்தியா சற்றுமுன்
india-flight
india-flight

நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவைக்கான குறைந்தபட்ச கட்டணம் இயக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது.

அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உள்நாட்டு விமான சேவைக்கான குறைந்தபட்ச கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு அடுத்த மாதம் இறுதி வரையில் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், “ஏடிஎப் எனப்படும் விமானத்திற்கு உபயோகிக்கப்படும் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

அதனால் விமான சேவையில் குறைந்தபட்ச கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இருந்தாலும் அதிகபட்ச விமான கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஒரு மாதத்தில் 3.5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் விமான சேவைகளை பயன்படுத்தினால், 100 சதவீத விமானங்கள் மீண்டும் இயக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.