ஆபாச படமெடுத்து சம்பாதித்ததைக் கண்டித்த மனைவியை வீடியோ எடுத்து மிரட்டிய கணவர்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
Pornography
Pornography

தன் கணவர் ஆபாச படமெடுத்ததை கண்டுபிடித்த மனைவி, பலாத்காரம் செய்யப்பட்டதால் போலீசில் கணவர் மீது புகார் கூறியுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த கார்கவுடா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் அவரின் கணவர் மற்றும் கொழுந்தனாரோடு கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

அந்த பெண்ணை அவரின் கணவர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறி திருமணம் செய்தார். ஆனால் நாளடைவில் கணவரின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட மனைவி அவரை ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்தார்.

அப்போது அவரின் கணவர் , பெண்களை வைத்து ஆபாச படமெடுத்து ,அவர்களை மிரட்டி பணம் சம்பாதிப்பதை கண்டுபிடித்தார். அதனால் இந்த விஷயத்தை அவரின் கணவரிடம் கூறி இந்த தொழிலை விடாவிட்டால் போலீசில் புகாரளிப்பதாக மிரட்டினார்.

அதை கேட்டு அந்த கணவரும் அவரின் உறவினராகளும் அந்த பெண்ணை பலத்காரம் செய்து அதையும் வீடியோ எடுத்தனர். பின்னர் போலீசுக்கு போனால் இந்த வீடியோ ஊடகத்தில் வெளியாகும் என்று மிரட்டினார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

ஆனால் அந்த பெண் தைரியமாக அவரின் கணவர் இருக்கும் பலான வீடியோ மற்றும் போட்டோக்களுடம் போலீசில் புகார் கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்னின் கணவர் மற்றும் அவரின் உறவினர்கள் அனைவரையும் கண்காணித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.