கேட்டரிங் நிறுவனத்தில் வேலை கேட்டு வந்த பெண்! கிச்சனுக்குள் கூட்டிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
vankodumai 1 - 2026

சமையல் வேலை கேட்டு வந்த ஒரு பெண்ணை இரு டெலிவரி பாய்ஸ் பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நாலசோபராவில் ஒரு தனியார் கேட்டரிங் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் அங்குள்ள பல ஆபீசில் பணியாற்றுவோருக்கும், வீடுகளுக்கும் தினமும் சமையல் செய்து சாப்பாடு கொடுத்து வருகிறார்கள். அந்த நிறுவனத்தில் பலநூறு டெலிவரி செய்யும் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் .

அந்த நிறுவனத்திற்கு கடந்த மாதம் சமையல் வேலை கேட்டு ஒரு பெண் வந்தார். அப்போது அந்த ஆபீஸ் வாசலில் உணவை டெலிவரி கொடுக்கு இரண்டு டெலிவரி பாய்ஸ் நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்கள் அந்த 37 வயதான பெண்ணிடம் தங்களுக்கு இந்த நிறுவன முதலாளியை தெரியுமென்றும் , அதனால் அவரிடம் சொல்லி வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு வீட்டில் காத்திருக்க சொன்னார்கள்.

அவர்களின் பேச்சை நம்பிய அந்த பெண் அவர்கள் சொன்ன வீட்டில் இருந்தார். அப்போது அந்த வீட்டிற்கு வந்த அவர்கள் அந்த பெண்ணிடம் சில உணவு வகைகளை சமைத்து காமிக்க சொன்னார்கள்.

அதை நம்பிய அவர் சமையல் செய்ய போகும்போதும் அந்த இருவரும் அந்த பெண்ணை அந்த கிட்சனுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.
பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பெண் இந்த விஷயத்தினை அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் கூறினார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தார்கள். இப்போது அதில் ஒருவரை கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.