பூட்டிய வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்! திறந்த வீட்டு ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
murder
murder

அருகே உள்ள வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக வீட்டின் உரிமையாளர் திறந்த போது நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 வயதான ஆசிஷ் பல்லாரி மாவட்டம் சண்டூர் அருகே தோரணகல் கிராமத்தில் தனது மனைவி மாலாவுடன் சொந்த ஊரான மேற்கு வங்காளத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் தோரணகல் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு வாடகைக்கு வந்த நிலையில் ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்ப்பதாக வீட்டு உரிமையாளரிடம் கூறி இருந்தார்.

இந்நிலையில், ஆசிஷ் வீடு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்ததை அடுத்து அவர் வேலைக்கு சென்றிருக்கலாம் என்று வீட்டு உரிமையாளரும் கண்டுகொள்ளாமல் இருந்ததை அடுத்து ஆசிஷ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் தன்னிடம் இருந்த மற்றொரு சாவியால் வீட்டுக்கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அப்போது, நாற்காலி ஒன்றில் கை, கால் கட்டப்பட்டு கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆசிஷ் பிணமாக கிடந்ததை அடுத்து சண்டூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட போது போலீசார் ஆசிஷ் உடலை கைப்பற்றி விசாரித்ததில் 2 நாட்களுக்கு முன்பாகவே ஆசிஷ் கொலை செய்யப்பட்டு இருப்பதும்
மனைவி எனக்கூறிக் கொண்டு, அவருடன் வசித்த மாலா தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது.

நாற்காலியில் ஆசிஷ்ஷை கட்டி வைத்து, அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்திருப்பதையும், மாலாவே இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதி தலைமறைவாகி விட்ட மாலாவை தேடிவருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.