பெற்றோர்களே கவனம்! செல்போன் வெடித்து சிறுவன் உயிரிழப்பு!

இந்தியா சற்றுமுன்
cellphone
cellphone

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுவன் முகத்தில் செல்போன் பேட்டரி வெடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுவன் மொபைல் போன் பேட்டரியை தனியாக சார்ஜ் செய்யும் யுனிவர்சல் சார்ஜரை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்துள்ளான். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து பேட்டரி சார்ஜ் ஆகி உள்ளதா என அறிய நாக்கை பேட்டரியில் வைத்துள்ளான்.

அப்போது பேட்டரி வெடித்து சிறுவன் முகம் சிதைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தான். அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சற்று கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகத்தில் செல்போன் பேட்டரி வெடித்து சிதறியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.