சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை! முதியவர் கைது!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
child 3
child 3

ஒரு 68 வயதான முதியவர், 10 வயதான சிறுமிக்கு செய்த கொடூர செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

68 வயது முதியவர் ஒருவர் மகாராஷ்டிராவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் தனியாக வசித்து வந்தார். அவர் வசித்து வந்த அதே பகுதியில், கட்டிட வேலை நடந்து வருகிறது. அங்கு கட்டிட வேலை செய்யும் ஒரு தம்பதிக்கு 10 வயதான மகள் உள்ள நிலையில், அவரை அந்த முதியவர் அடிக்கடி பார்த்து வந்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த திங்கள் கிழமையன்று அந்த முதியவர் தன்னுடைய வீட்டில் சில பலான படங்களை பார்த்துள்ளார். பின், அந்த தாத்தா சாக்லேட் ஒன்றை வாங்கி கொண்டு அந்த சிறுமி வசிக்கும் குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, சிறிது நேரம் கழித்து அந்த சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக அழைத்து அந்த கட்டிடத்தின் ஒரு தனிமையான பகுதிக்கு கூட்டி சென்றார். பிறகு, அந்த சிறுமியை அவர் பலாத்காரம் செய்தது மட்டும் இல்லாமல் இதை பற்றி யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டி விட்டு ஓடிவிட்டார்.

இதை தொடர்ந்து, அந்த சிறுமி தனியாக நின்று அழுது கொண்டிருப்பதை பார்த்த சிறுமியின் மாமா அதிர்ச்சி அடைந்தார். ஓடிப்போய் சிறுமியிடம் விசாரித்த போது, அவர் அந்த தாத்தாவால் தனக்கு நடந்த கொடுமைகளை விவரித்தார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து போலீசார் அந்த பெரியவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையிலடைத்தனர்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.