woman - 2026

ஆந்திர மாநிலத்தில் தனது 8 மனைவியையும் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருண் குமார், ஆந்திராவின் விசாகப்பட்டணம் பகுதியை சேர்ந்த இவர் பாலியல் தொழில் மற்றும் போதை மருந்து கும்பலுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இவர் பல பெண்களை கத்தி மற்றும் துப்பாக்கி காட்டி மிரட்டி பெண்களை பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், இவர் தனது மகள் அதாவது முதல் மனைவியின் மகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல், அவரது முதல் மனைவி கீதாஞ்சலி, மற்றும் இரண்டாவது மனைவி லட்சுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியுள்ளார்.

andra - 2026

இதனையடுத்து, அருண் குமார் இதுவரை மொத்தம் 8 திருமணம் செய்துள்ளார். மேலும், அந்த எட்டு மனைவியையும் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியுள்ளார்.

இதனையடுத்து, ஒருகட்டத்தில் பொறுமை இழந்த கீதாஞ்சலி மற்றும் லட்சுமி, கடந்த மாதம் தனது கணவன் அருண் குமார் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரில், தங்களின் உயிருக்கு கணவரால் பெரிய ஆபத்து இருபதாக குறிப்பிட்டனர். ஆனால், உள்ளூர் போலீசாருக்கும் அருண் குமாருக்கும் தொடர்பு இருப்பதால், அருண் குமார் மீதான புகாரில் அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளனர்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

இதனால், கீதாஞ்சலி மற்றும் லட்சுமி மகளிர் ஆணையம் முன்பு தங்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து மாநகர போலிஸ் தலைவர் மனிஷ் குமார் பார்வைக்கு கொண்டு சென்றனர். இது மட்டும் இல்லாமல் அருண் குமாரால் பாதிக்கப்பட்ட பெண்கள், பேசி பதிவு செய்த ஆடியோ செய்தியையும் மனிஷ் குமாருக்கு அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து, மனிஷ் குமார் அருண் குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending