3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை! பாதுகாப்பு படையினர் அதிரடி!

Published:

jammu kasmir
jammu kasmir

கக்கபோரா பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கக்கபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்.

இதனால், இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிசண்டை நடைபெற்றது. இதில், மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.

இந்த சமப்வத்தின் போது இஷ்ரத் ஜான் (25), குலாம் நபி தார் (42) ஆகிய இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பயங்கரவாதிகளிடமிருந்து வெடிமருந்து குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் நேற்று பாஜக தலைவர் அன்வர் கானை கொல்ல முயற்சி செய்தவர்கள் என கூறப்படுகிறது.

ஜம்மு – காஷ்மீர் பாஜக தலைவர் அன்வர் கானை கொல்ல நேற்று பயங்கரவாதிகள் அவரின் வீட்டில் நுழைய முயன்றனர். அப்போது, வீட்டின் வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி பயங்கரவாதிகளை தடுத்தபோது, அவரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இதில் படுகாயமடைந்த காவலாளி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி காவலாளி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related articles

Recent articles

spot_img