நடிக்க விளம்பரம் கொடுத்து நிர்வாண படமெடுத்து ஆபாச தளத்தில் பதிவேற்றம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் சினிமா
Pornography
Pornography

நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களை நிர்வாண படமெடுத்து அதை லட்சக்கணக்கில் விற்று பணம் சம்பாதித்த ஒரு தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர் .

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவின் பித்தாநகரில் சுபஞ்சன் ராய் என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் வசித்து வந்தார். இவர் இப்போது ஓடிடி தளத்திற்கு படங்களை தயாரிப்பதாகவும் அதில் நடிக்க புது முக நடிகைகள் தேவையென்றும் விளம்பரம் கொடுத்தார்.

அந்த விளம்பரத்தை பார்த்த பலர் அதில் நடிக்க ஆடிஷனுக்கு வந்தார்கள். அப்போது அதில் ஆடிஷனுக்கு வந்த பல பெண்களை அந்த ராய் தன்னுடைய படத்தில் நடிக்க தேர்வு செய்தார் .

அப்போது அங்கு வந்த பெண்களில் சிலரிடம் அவர்களை நிர்வாணமாக படம் பிடித்துள்ளார் .பிறகு அவர்களிடம் அவர் முகத்தை காமிக்கமாட்டோம் என்று உறுதி மொழி கொடுத்தார். அதை நம்பிய அந்த பெண்கள் அவர் கேட்டபடி முகத்தை காட்டாமல் நிர்வாணமாக நடித்தனர்.

அதன் பிறகு அந்த ராய் அந்த பெண்களில் சிலரின் வீடியோவில் முகத்தை அவர்களுக்கு தெரியாமல் சேர்த்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை மிகப் பிரபலமான பார்ன் தளத்தில் பல லட்சங்களுக்கு விற்றுள்ளார்.

பின்னர் அந்தப்பெண் தன்னுடைய நிர்வாண வீடியோவை உலகின் டாப் 10 ஆபாச தளத்தில் பார்த்து அதிர்ந்துள்ளார்.
அதனால் அந்த பெண் அந்த தயாரிப்பாளர் ராய் மீது தன்னை ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுத்து பார்ன் சைட்டில் விற்றதாக போலீசில் புகார் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

நியூ டவுனில் உள்ள ஒரு ஹோட்டலில் இதேபோன்ற வீடியோவை படமாக்கிக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களைப் பிடித்தனர். இந்த கும்பலின் மற்ற உறுப்பினர்களை கைது செய்ய முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.