விமானத்தில் ஆடை அவிழ்த்து விமானப்பணிப் பெண்ணிடம் முத்தம் கேட்ட நபரால் பரபரப்பு!

இந்தியா சற்றுமுன்
india-flight-1
india-flight-1

தில்லியில் இருந்து பெங்களூர் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் தன்னுடைய ஆடையை கழற்றியது சக பயணிகளிடையே அவருடைய செயல் முகம் சுளிக்க வைத்துள்ளது.

தலைநகர் தில்லியில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமானத்தில் இருந்த பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணை அழைத்து எனக்கு முத்தம் வேண்டும்.

.இதனால் அதிர்ச்சி அடைந்த விமான குழுவினர் அவரை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தி இருக்கையில் அமரச் செய்தனர் பிறகு அவரை சோதனை செய்த விமானிகள் போதைப்பொருள்கள் ஏதும் உள்ளதா என்று பரிசோதித்தனர். பிறகு அவர் விமான பணி குழுவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

உடனே சிறிது நேரம் கழித்து விமான பணிப்பெண் ஒருவர் அந்த பயணி ஆடையை கழற்றி விட்டு நிர்வாணமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

flight - 2026

அந்த குழுவினர் அந்த பயணியை ஆடையை அணியச் சொல்லி வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் அவர் உடையை உடுத்திக் கொண்டார்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

மேலும் இது குறித்து விமான நிலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் விமானத்திற்குள் சென்ற போலீசார் அந்த நபரை கேள்வி கேட்ட பொழுது அவர்களின் முன்னிலையிலேயே தனது லேப்டாப்பை போட்டு உடைத்து ஆடைகளைக் கழட்டியுள்ளார். போலீசார் அந்த பயணியை ஆடையை அணியுமாறு கேட்டுகொண்டனர்.

மேலும் அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அந்த நபர் விமானத்தில் ஏறிய உடனேயே பாதுகாப்புகான லைப்ஜாக்கெட்டுகள் குறித்து கேட்டு அவர்களுடன் சண்டை போட்டார். அவர்களது கண்முன்னே அவர் அங்கு ஆடையை கழற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விமானத்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டது என்ற அடிப்படையில் அந்த நபருக்கு விமானத்தில் பறக்க தடை விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த நம்பருக்கு விமானத்தில் பறக்க 30 நாட்கள் தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.