6 வயது சிறுமிக்கு சொந்த தாத்தாவும், அவரின் நண்பர்களும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

Published:

vankodumai
vankodumai

மத்திய பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை தனது மூன்று வயது தம்பியின் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்த தாத்தா.

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள கோலார் பகுதியைச் சேர்ந்த 6 வயதான சிறுமி கடந்த வியாழக்கிழமையன்று தனது மகள் அழுத்தை பார்த்த தாய் என்ன என்று விசாரித்து உள்ளார்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்களை சிறுமி தனது தாயாரிடம் சொல்லியுள்ளார். இது குறித்து உடனடியாக காவல்துறையிடம் அந்த தாய் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுமியிடம் தங்களால் தகவல்களை கேட்டுப்பெற முடியாததால் உளவியல் ஆலோசகர்களின் உதவியுடன் நடந்தவை குறித்து கேட்டு அறிந்தனர்.

உளவியல் ஆலோசகர்கள் மேற்கொண்ட உரையாடலில் சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.

தாத்தா மற்றும் வேறு சில நபர்களும் தன்னையும் 3 வயது தம்பியையும் சஞ்சய் என்ற நபர் அவருடைய வீட்டுக்கு கூட்டிச் சென்றார் பிறகு முதலில் சஞ்சய் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் பிறகு சிறிது நேரம் கழித்து சிறுமியின் தாய் வழி தாத்தாவும் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

இச்சம்பவம் எப்போது நடந்தது என்ற தகவலை சிறுமியால் கூற இயலவில்லை மேலும் நடந்தவற்றை வெளியே யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி அவரிடம் 20 ரூபாயை கொடுத்திருக்கிறார் அவரின் தாத்தா.

இந்த சம்பவம் அனைத்தும் தனது தம்பி முன்னால் நடந்தாக அந்த சிறுமி வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கோலார் காவல்நிலைய ஆய்வாளர் சந்திரகாந்த் பட்டேல் இருவர் மீதும் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img