எந்தெந்த அவசர காலத்தில் உதவும் உங்கள் பிஎஃப்..?

இந்தியா சற்றுமுன்
epf image
epf image

கோவிட் போன்ற மருத்துவ அவசரநிலை காரணங்களுக்காக பி.எஃப் பணத்தை திரும்ப பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) நீண்டகால ஓய்வூதிய சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. ஆனால் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ) விதிகளின்படி, மருத்துவ அவசரநிலை, நிலம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற சில நிபந்தனைகளில் பி.எஃப் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.

ஒரு பி.எஃப் அல்லது ஈ.பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர் கோவிட்டிற்கும் பி.எஃப் பணத்தை திரும்பப் பெற முடியும் என்று முதலீட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்..

மருத்துவ சிகிச்சைக்கான பி.எஃப் திரும்பப் பெறும் விதிகள் குறித்து பேசிய செபி பதிவுசெய்த வரி மற்றும் முதலீட்டு நிபுணர் ஜிதேந்திர சோலங்கி, “ஒரு பிஎஃப் / இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர், தனது பிஎஃப் பணத்தை திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறார்.

ஒரு பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர், அவரது மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் கோவிட் பிந்தைய நோய்த்தொற்றுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், பிஎஃப் பணத்தை திரும்பப் பெறுவது சாத்தியமாகும். ஆனால், பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர் ஆபத்தான நோய் மற்றும் சிகிச்சையின் அதிக செலவை நிறுவ மருத்துவமனை பில்கள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் ஆவணங்களைக் காட்ட வேண்டும்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் ஒரு மாதத்திற்கு மேல் இருந்தால் அல்லது ஒரு பெரிய அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கு பி.எஃப் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.

கோவிட் -19 சிகிச்சை இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.