மூதாட்டி வீட்டில் நுழைந்து பாலியல் வன்கொடுமை! அடித்தே கொன்ற மக்கள்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
old-woman
old-woman

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அப்பிகானிபள்ளி என்ற கிராமத்தில் 60 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார்.

இத்தகைய சூழலில், அப்பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்ற நபர் அந்த பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை தாக்கியுள்ளார்.

தொடர்ந்து அவரிடம் இருந்த 4 சவரன் நகைகளை பறித்து இருக்கின்றார். பின்னர், அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றார்.

இதில் அந்த மூதாட்டிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால், பொதுமக்கள் மிகுந்த ஆவேசத்தில் இருந்துள்ளனர்.

பின்னர், தனது வீட்டில் மூர்த்தி பதுங்கியிருந்ததை கண்டறிந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர்.

இதில், சம்பவ இடத்திலேயே மூர்த்தி உயிரிழந்தார். தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மூர்த்தியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.