கனமழையில் விழுந்த கட்டிடம்! மும்பையில் 11 பேர் உயிரிழப்பு!

இந்தியா சற்றுமுன்
mumbai 1 - 2026

கனமழை காரணமாக, மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கேரளாவில் பருவமழை கடந்த 3ம் தேதி தொடங்கியது. எனவே 10ம் தேதி அதாவது இன்றைய தினம் மகாராஷ்டிராவில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தது.

mumbai 1 1 - 2026

ஆனால், ஒரு நாள் முன்னதாக நேற்றே பருவழை மும்பையில் தொடங்கி விட்டது. தானே, பால்கரில் கனமழை கொட்டி தீர்த்தது.

நேற்று காலை 8 மணி வரையுள்ள 24 மணி நேரத்தில் கொலாபாவில் 77.4 மி.மீட்டர், சாந்தாகுரூசில் 59.6 மிமீ மழை பெய்ததாக பதிவானது. மும்பையில் பெய்த கனமழையால், ஒரேநாளில் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

mumbai 2 1 - 2026

இதனால் மக்கள் தத்தளித்துவிட்டனர். அதேபோல, சாலைகள், ரயில் தண்டவாளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், பஸ், ரயில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
mumbai 3 - 2026

இந்நிலையில், கனமழை காரணமாக மும்பையின் மாலட் மேற்கு பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட் கட்டிடம் அப்படியே இடிந்து மளமளவென விழுந்து விபத்துக்குள்ளானது.

2 மாடிகள் கொண்ட கட்டிடம் அது.. இந்த கட்டிட விபத்தில், 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

தற்போது, கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் 2 பேர் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த கட்டிட விபத்தில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

mumbai4 - 2026

கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.