பயணிகள் குறைவு: ரத்தான ரயில்கள்; சேவை நீட்டிப்பு ரயில்கள் விவரம்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்
railway station

தெற்கு ரயில்வேயில் ஜூன் 30 இம்மாத இறுதி வரையிலான கால கட்டத்தில், ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அது குறித்த விவரம்…

ரத்து செய்யப்படும் ரயில்கள்…

பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக

  • வண்டி எண் 02667/02668 நாகர்கோவில் – கோயம்புத்தூர் – நாகர்கோவில் இரவு நேர சிறப்பு ரயில்,
  • வண்டி எண் 06729/06730 மதுரை – புனலூர் – மதுரை சிறப்பு ரயில்,
  • வண்டி எண் 06101/06102 சென்னை எழும்பூர் – கொல்லம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்,
  • வண்டி எண் 06019/06020 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – மதுரை – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்,
  • வண்டி எண் 06063/06064 சென்னை எழும்பூர் – நாகர்கோவில் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்,
  • வண்டி எண் 06065/06066 தாம்பரம் – நாகர்கோயில் – தாம்பரம் சிறப்பு ரயில்,
  • வண்டி எண் 06157/06158 மதுரை – சென்னை எழும்பூர் – மதுரை சிறப்பு ரயில் (தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக இயக்கப்படுவது),
  • வண்டி எண் 06343/06344 திருவனந்தபுரம் – மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரயில்,
  • வண்டி எண் 06851/06852 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக இயக்கப்படும்)

ஆகியவை ஜூன் 30 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

central-railway-1

வெளிமாநிலங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு…

ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் திருப்பதி வழியாக இயக்கப்படும் வண்டி எண் 6352 நாகர்கோயில் – மும்பை சி எஸ் டி சிறப்பு ரயில் ஜூலை 1 முதல் நவம்பர் 7 வரையும்,

திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 06351 மும்பை சி எஸ் டி – நாகர்கோவில் சிறப்பு ரயில் ஜூலை 2 முதல் நவம்பர் 8 வரையும்,

வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 06053 மதுரை – பிகானேர் ஜூலை 1 முதல் நவம்பர் 4 வரையும்,

ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 06054 பிகானேர் – மதுரை சிறப்பு ரயில் ஜூலை 4 முதல் நவம்பர் 7 வரையும்,

வெள்ளிக்கிழமைகளில் திருப்பதி வழியாக இயக்கப்படும் வண்டி எண் 06733 ராமேஸ்வரம் – ஓகா சிறப்பு ரயில் ஜூலை 2 முதல் நவம்பர் 5 வரையும்,

செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் வண்டி எண் 06734 ஓகா – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஜூலை 6 முதல் நவம்பர் 9 வரையும்,

ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 06070 திருநெல்வேலி – பிலாஸ்பூர் சிறப்பு ரயில் ஜூலை 4 முதல் நவம்பர் 7 வரையும்,

செவ்வாய்க் கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 06069 பிலாஸ்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜூலை 6 முதல் நவம்பர் 9 வரையும்,

புதன்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 06072 திருநெல்வேலி – தாதர் சிறப்பு ரயில் ஜூலை 7 முதல் நவம்பர் 3 வரையும்,

வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 06071 தாதர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜூலை 8 முதல் நவம்பர் 4 வரையும் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.