woman - 2026

மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணமான புதுப்பெண்ணை ஊரார் முன்னிலையில் மரத்தின் கிளையில் கட்டி அந்தரத்தில் தொங்கவிட்டு அடித்ததால் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

மத்திய பிரதேசத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தில்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

இந்த கிராமத்தில் 19 வயது சிறுமிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. புகுந்த வீட்டில் தொடர்ந்து அவர் பிரச்சனைகளை சந்தித்து வந்ததால் அங்கிருந்து வெளியேறினார்.

பிறந்த வீட்டுக்கு வந்தால் திட்டுவார்கள் என்ற அச்சத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியிருக்கிறார்.

இதுபற்றிய விபரம் தெரியவந்ததும், அந்த புதுப்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் உறவினர் வீட்டிற்கு சென்று அழைத்து வந்துள்ளனர்.

woman 2 - 2026

ஊருக்கு நடுவே உள்ள மரத்தின் கிளையில் அந்தரத்தில் தொங்கவிட்டனர். பின்னர் தந்தையும், சகோதரனும் ஆளுக்கொரு பக்கம் நின்றுகொண்டு கட்டையால் அடித்து தாக்கினர்.

எத்தனை கதறியும் அவர்கள் அடித்துக்கொண்டே இருந்துள்ளனர். இதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த ஊராரில் சிலர் அந்த கொடூர சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

அந்த வீடியோவை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நடந்த சம்பவத்தினால் புதுப்பெண் மருத்துவமனையில் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். இதையடுத்து அலிராஜ்ப்பூர் மாவட்ட எஸ்பி சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending