அருண் சிங் – அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமனம்!

இந்தியா

arun-singhபுது தில்லி: அமெரிக்காவுக்கான புதிய தலைமைத் தூதராக அருண் சிங்கை மத்திய அரசு நியமித்துள்ளது. அமெரிக்காவுக்கான தலைமைத் தூதராகப் பொறுப்பு வகித்துவந்த ஜெய்சங்கர் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளராக ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, இப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், இப்பதவிக்கு அருண் சிங்கை நியமித்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரான்ஸ் நாட்டின் தலைமைத் தூதராக அருண் சிங் பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடியின் பயணத்துக்குப் பின்னர் அமெரிக்க தலைமைத் தூதர் பதவியை அருண் சிங் ஏற்றுக் கொள்வார் என தில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தலைமை தூதரகங்களில் கூடுதல் செயலாளராக பணியாற்றியவர் அருண் சிங். மேலும், ஜப்பான், இஸ்ரேல் நாடுகளில் உள்ள இந்திய தலைமை தூதரகங்களில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள இந்திய தலைமை தூதரகத்தில் சுமார் 5 ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.