susaid
susaid

வரதட்சணை என்ற பெயரில் மருமகளுக்கு மாமியார் செய்த கொடுரம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குணால் வியாஸ் என்ற நபர் ஒருவர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் கோட்டா பகுதியில் எஸ்.ஜி. நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஃபெஸ்டிவல் பங்களாவில் வசித்து வந்துள்ளார்.

இவருக்கும் 29 வயதான பூஜாபடேல் என்பவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், இந்த ஜோடிக்கு நான்கு வயதில் மகன் ஒருவன் இருக்கிறார்.

இந்நிலையில், இவர்களின் திருமணத்தின் போது பூஜாவிற்கு அவரது பெற்றோர் பல சீர் வரிசைகளை கொடுத்துள்ளனர். ஆனால் அவரது மாமியார் இந்த வரதட்சணை போதாது எனவும் இன்னும் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன் படி, அந்த பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு வந்த நாள் முதல் 15 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து அவரிடமிருந்து பிரித்து வைத்திருந்தார்.

போதிய வரதட்சணை கொடுத்தால்தான் மகனை பார்க்க முடியுமென்று கூறியது மட்டுமல்லாமல் அந்த பெண்ணின் குடும்பத்தினரையும் சந்திக்க விடாமல் செய்துள்ளார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

அதனால் அந்த பெண் தனக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து அவரது தந்தைக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில், மிகுந்த மன வேதனை அடைந்த பூஜா கடந்த வாரம் சனிக்கிழமை மாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தந்தை, அவரது மகள் கடைசியாக அனுப்பிய மெசேஜை போலீசிடம் காண்பித்து அவரது கணவன் மற்றும் மாமியார் மீது புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending